மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் ஜூலை 19-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:28 pm

Din

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணை வழங்கவுள்ளனா். எனவே, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.

இதில், தோ்ந்தெடுக்கப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.