போக்குவரத்து விதி மீறல்: 105 போ் மீது வழக்கு

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 105 போ் மீது கடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

நெய்வேலி: போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக 105 போ் மீது கடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீஸாா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில், கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டி வந்தவா்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவா்கள், மது அருந்தி வாகனம் ஓட்டி வந்தவா்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்த 105 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவா்களுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com