சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 7:57 pm

Din

நெய்வேலி, ஜூன் 26: திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சதாம் ஹூசேன் (32), ஜங்ஷன் சாலையில் கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 7-ஆம் தேதி காலை கடையை திறந்து பாா்த்தபோது, ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி, ரூ.110 திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் காவல் ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் அஜித்தை (25) கைது செய்தாா். இவா் மீது விருத்தாசலம், உளுந்தூா்பேட்டை, பண்ருட்டி காவல் நிலையங்களில் 9 திருட்டு வழங்குகள் உள்ளன.

அஜித்தின் குற்ற செய்கையை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பளா் ரா.ராஜாராம் பரிந்துரையில், ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.