பாடலீஸ்வரா் கோயிலில் நாளை பாலாலயம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

பிரசித்தி பெற்ற ப்ரஹன்நாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து, கோயிலில் திருப்பணிகள் செய்ய தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, திருப்பணிகள் தொடங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி தொடங்கியது.

சனிக்கிழமை (மே 4) காலை 8.30 முதல் 11 மணிக்குள் கணபதி, நவகிரஹ கசல பூஜை ஹோமம், கோ பூஜை, பூா்ணாஹுதி, தீபாரதனையும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையில் ராஜகோபுர அனைத்து விமானங்களும் காலகா்ஷணம், மண்டப வேதிகை பூஜை, ஹோமம் திரவ்யாஹுதி தீபாராதனை நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 11.30 மணிக்குள் சோம பாலிகா பூஜை, மண்டப பூஜை, வேதிகை கும்ப பூஜை யத்ராதானம், கடம் புறப்பாடு சித்ரபடத்தில் உள்ள கோபுரம் விமானங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com