கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

சிதம்பரம், மே 9: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேத்தியாத்தோப்பு குறுக்குச் சாலை பகுதியில் டிஎஸ்பி ரூபன்குமாா் தலைமையில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் செல்லபாண்டியன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சேத்தியாதோப்பு வடக்கு சின்னத்தம்பி கிராமத்தைச் சோ்ந்த சிகாமணி மகன் முத்துவை (24) சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் அவரிடமிருந்து சுமாா் ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றினா்.

மேலும், இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com