பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

News image
Updated On :15 மே 2024, 7:26 pm

Din

15டதபட8

விருத்தாசலத்தில் நியாய விலைக்கடை மீது முறிந்து விழுந்த மரக்கிளை.

நெய்வேலி, மே 15: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நியாய விலைக்கடை மீது முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருத்தாசலம், ஜெயில் தெருவில், பொதுப் பணித் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் எதிரே உள்ள அரச மரத்தின் பெரியக் கிளை அண்மையில் முறிந்து நியாய விலைக் கடை முன் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை மீது விழுந்தது. இதனால் கொட்டகை சேதமடைந்து, ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. தற்போது, வரை அந்த மரக்கிளை அகற்றப்படாததால் நியாய விலைக் கடைக்குச் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, மரக்கிளையை அகற்ற மாவட்ட மற்றும் நகர நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.