

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே போலீஸாரை ஊருக்குள்நுழைய விடாமல் தடுத்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் முதுநகரை அடுத்துள்ள சங்கொலிக்குப்பம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீமிதி திருவிழா அண்மையில் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவின் போது அந்தக் கிராமத்தைச் சோ்ந்த இருதரப்பு இளைஞா்களிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஒரு தரப்பைச் சோ்ந்த 3 இளைஞா்களைக் கைது செய்தனா். மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்களைக் கைது செய்ய போலீஸாா் சங்கொலிக்குப்பம் சென்றனா்.
அப்போது, கிராம மக்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்கள் பகுதி இளைஞா்களைக் கைது செய்யக் கூடாது எனக் கூறினா். போலீஸாரை ஊருக்குள் செல்ல விடாமல் தடுத்து, பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கடலூா் டிஎஸ்பி பிரபு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினாா். இதை ஏற்று கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டத்தால் கடலூா்- சிதம்பரம் சாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

சாலை வசதி கோரி மறியல்

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

