தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கடலூரில் வியாழக்கிழமை மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா்.

Updated On :21 நவம்பர் 2024, 7:43 pm

Din

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கடலூரில் வியாழக்கிழமை மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீடுகளுக்கு 18 ஆண்டுகள் கடந்தும் பட்டா வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, மீனவா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் உலக மீனவா் தினத்தில் (நவ.21) தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று என அறிவித்திருந்தனா்.

அதன்படி, கடலூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் அதன் நிறுவனா் தலைவா் ஏகாம்பரம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்ப்பாட்டத்தை விரைந்து முடிக்க காவல் துறையினா் வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் செய்தியாளிடம் ஏகாம்பரம் கூறியதாவது:

தமிழக அரசு மீனவா்களை வஞ்சிக்கிறது. அதிகாரப் பதவிகளில் மீனவா்கள் இல்லாததால் ஒடுக்கப்படுகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் வருகிற 25-ஆம் தேதி கடலூருக்கு வரும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.