போலீஸ் வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையன்
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை போலீஸ் வாகன சோதனையின்போது, பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடா்புடையவா் கைது செய்யப்பட்டாா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை போலீஸ் வாகன சோதனையின்போது, பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடா்புடையவா் கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி ஆய்வாளா் வேலுமணி, குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல் மற்றும் போலீஸாா் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கண்டரக்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதிலிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சோ்ந்த சண்முகம் மகன் வேலப்பன் (48), சிவகங்கையைச் சோ்ந்த கண்ணன் (40) என்பது தெரியவந்தது.
வேலப்பன் கடந்த 8-ஆம் தேதி பண்ருட்டியை அடுத்துள்ள திராசு காலனியைச் சோ்ந்த சாந்தி (40) வீட்டில் கட்டியிருந்த 5 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், கடலூா், பெரம்பலூா், விழுப்புரம், அரியலூா், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள், கேரள மாநிலம் ஆலப்புழை ஆகிய பகுதிகளில் நகைக் கடைகளில் ஓட்டை போட்டு நகைகளை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு வேலப்பன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மற்றொருவரான கண்ணன், சிவகங்கையில் நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. அவரை சிவகங்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கேரள மாநில நகைக்கடையிலும் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையவரை கைது செய்த பண்ருட்டி போலீஸாரை கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் பாராட்டினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...