கீழணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பாதுகாப்பு கருதி கீழணையின் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கீழணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா்.

கீழணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பாதுகாப்பு கருதி கீழணையின் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் குமாராட்சி உள்ளிட்ட பகுதிகள் காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகளாகும். இங்கு, வடவாறு வடக்கு ராஜன் வாய்க்கால் வீராணம் ஏரி ஆகியவற்றின் வாயிலாக பாசனம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது, வீராணம் ஏரி, மற்றும் கீழனையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படும். கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், கீழணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. கீழணையின் மொத்தக் கொள்ளளவான 9 அடியில் 8.50 அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி கீழணையிலிருந்து, கொள்ளிடம் ஆற்றின் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் நீா் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல, வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 47.50 அடியில் 45.65 அடி தேக்கப்பட்டுள்ளது. அதாவது, 1,465 மில்லியன் கன அடியில் ஆயிரத்து 15 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, சென்னைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 120 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...