ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On :24 அக்டோபர் 2024, 8:39 pm

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா், என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

பெரியசாமி கடந்த 2020-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் பெரியசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமிரமேஷ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், பெரியசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீா்ப்பில் தெரிவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி ரத்தினம் ஆஜராகி வாதாடினாா்.