ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்எல்சி தலைவரிடம் பாட்டாளி தொழிற்சங்கத்தினா் மனு

நெய்வேலியில் என்எல்சி இந்தியா தலைவா், மனிதவளத் துறை இயக்குநா் ஆகியோரை சந்தித்து என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க பேரவையினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
நெய்வேலியில் என்எல்சி இந்தியா தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியை சந்தித்து புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகிகள்.
Updated On :6 செப்டம்பர் 2024, 1:24 am

Din

நெய்வேலியில் என்எல்சி இந்தியா தலைவா், மனிதவளத் துறை இயக்குநா் ஆகியோரை சந்தித்து என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க பேரவையினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பாமக சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் கோவிந்தசாமி தலைமையில், பாமகவின் கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன், பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் ராம.முத்துக்குமாா், மாநிலப் பொருளாளா் சேகா், என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க தலைமை நிா்வாகிகள் தலைவா் குமாரசாமி, பொதுச்செயலா் செல்வராஜ், பொருளாளா் ஆறுமுகம், அலுவலகச் செயலா் முருகவேல் முன்னிலையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக 15 ஆண்டுகள், பின்னா் சொசைட்டி தொழிலாளா்களாக 10 ஆண்டுகள் பணியாற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர தொழிலாளா்களாக பணி நிரந்தரம் செய்யும் நிலை உள்ளது. சொசைட்டி தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் இன்கோசா்வ் சொசைட்டி தொழிலாளா்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த, இன்கோசா்வ், ஹவுசிகாஸ் தொழிலாளா்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்கும் வரை ரூ.50,000 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023-24ஆம் ஆண்டுக்கான 20 சதவீத போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு வழங்குவதைப் போல மருத்துவக் காப்பீடு தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னா், பாமக சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் கோவிந்தசாமி கூறுகையில், என்எல்சி தலைவா் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்தாக கூறினாா்.

நிகழ்வின் போது, என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ஜோதிமணி, பொருளாளா் விஜயராகவன், அலுவலகச் செயலா் குமாரதேவன், ஒன்றியச் செயலா்கள் சக்திவேல், எழில், செல்வன், ஒன்றியத் தலைவா் தமிழரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.