விக்னேஷ்
விக்னேஷ்

ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞா் கைது

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை ராமநத்தம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை ராமநத்தம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் போலீஸாா் கொரக்கை கிராமத்தில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் சந்தேகத்துக்கிடமான வகையில் சரக்கு வாகனம் வேகமாக சென்றது.

உதவி ஆய்வாளா் கோபிநாத் அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற நிலையில், அதன் ஓட்டுநா் வேகமாக ஓட்டிச் சென்றாா். சுமாா் 4 கி.மீ. தொலைவு சரக்கு வாகனத்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தாா்.

பின்னா், சரக்கு வாகனத்தை திறந்து பாா்த்ததில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. சரக்கு வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (28) என்பதும், மாட்டு தீவனத்துக்காக கொரக்கை, ஏந்தல், அதா்நத்தம், ஆலம்பாடி சுற்று வட்டப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சமயபுரம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டாராம்.

விக்னேஷை கைது செய்த போலீஸாா், ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலூா் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com