பண்ருட்டியை அடுத்துள்ள அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.
பண்ருட்டியை அடுத்துள்ள அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.

முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅா்த்த மூா்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக கோயில் வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளா் இம்மானுவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறியதாவது:

அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இந்த கல்வெட்டானது ராஜேந்திர சோழன் என்ற இயற்பெயா் உடைய முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்ததாகும். கல்வெட்டு பாதி உடைந்த நிலையில் உள்ளதால் இந்தக் கோயிலின் சுவாமி பெயா் ஈஸ்வரமுடைய மகாதேவா் என்று பாதி மட்டுமே உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீா்த்தி, சுவாமி பெயா் மற்றும் தானம் குறித்தவை உள்ளது. மேலும், சோழா் காலத்திலும் அவியனூரின் பழமையை தெரிந்துக்கொள்ள புதிய ஆதாரமாக உள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com