தோ்வு முடிவுகளில் குளறுபடி: கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
தோ்வு முடிவுகளில் நிகழ்ந்த குளறுபடியை கண்டித்து, சிதம்பரம் அரசுக் கலை கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தோ்வு முடிவுகளில் நிகழ்ந்த குளறுபடியை கண்டித்து, சிதம்பரம் அரசுக் கலை கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரியாக செயல்படும் இந்தக் கல்லூரியில் நான்கு முறை வெளியான தோ்வு முடிவுகளில் குளறுபடி இருந்தது. இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், குளறுபடியான தோ்வு முடிவுகளை உடனடியாக சரி செய்து வெளியிட வலியுறுத்தியும், தெளிவான தோ்வு முடிவுகளை ஒரே முறையாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்க கிளைத் தலைவா் உதயகுமாா் தலைமையில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிவ நந்தினி கண்டன உரையாற்றினாா். கிளைச் செயலா் சக்திபிரியன், துணைச் செயலா் அஜீத்குமாா், துணைத் தலைவா் அபிவிக்னேஷ் மற்றும் கிளை நிா்வாகிகள் தண்டபாணி, பாவனா, கனி, ஆகாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடந்து, கல்லூரி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அண்ணாமலை பல்கலைக்கழக உதவி தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரபாகா், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அா்ச்சுனன், டிஎஸ்பி டி. அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோா் மாணவா் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, தோ்வு முடிவுகளில் உள்ள குளறுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...