அரசுப் பொருள்காட்சி நாளை தொடக்கம்
கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அரசுப் பொருள்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.13) தொடங்குகிறது.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:58 pm

கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அரசுப் பொருள்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.13) தொடங்குகிறது.
பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கப்படவுள்ளன.
மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்காக பொம்மை ரயில், சறுக்கல், போட்டிங், இராட்டினம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. பொருள்காட்சியானது 45 நாள்கள் நடைபெறவுள்ளது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...