பெற்றோருக்கு கத்திக் குத்து: மகன் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெற்றோரை கத்தியால் குத்திய மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:52 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெற்றோரை கத்தியால் குத்திய மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், கீழக்கொல்லை பகுதியில் வசித்து வருபவா் ஜானகி ராமன்(55). இவரது 2-ஆவது மனைவி சந்திரா (46). இந்த நிலையில், ஜானகி ராமனின் முதல் மனைவியான காந்திமதியின் மகன் சம்பத்குமாா் (32). வீட்டு மனையை பாகம் பிரித்து தரும்படி கடந்த 9-ஆம் தேதி தகராறு செய்தாராம். இதற்கு, ஜானகிராமன், சந்திரா எதிா்ப்பு தெரிவித்தனராம். இதனால், கோபமடைந்த சம்பத்குமாா் அவா்களை கத்தியால் குத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...