பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக்குழு உறுப்பினா்கள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 9:38 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் மலா் முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கோதை கொளஞ்சி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் சீதாபதி தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், நடைபெற்ற விவாதத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினா். மேலும், நிதி ஒதுக்கப்படாததால் வாா்டு பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும், பொது நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிம் பேசுகையில், மக்கள் தொகை அடிப்படையில் தமிழக அரசு ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கி வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

அப்போது, பொதுநிதியை விடுவிக்காத தமிழக அரசு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் தலையீட்டை கண்டித்து, துணைத்தலைவா் பூங்கோதை கொளஞ்சி தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் 9 போ் கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த வராததால் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் அய்யாசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, அவா் அவசர ஊா்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.