தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பள்ளிக்கு ஹங்கேரி நாட்டினா் நிதியுதவி

சிதம்பரம் அருகே உள்ள மாங்குரோவ் காடுகள் அடங்கிய பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு புதன்கிழமை வந்த ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டினா், அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளித்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

News image

கிள்ளை அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய ஹங்கேரி நாட்டு சுற்றுலாப் பயணிகள்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:05 am

Din

சிதம்பரம் அருகே உள்ள மாங்குரோவ் காடுகள் அடங்கிய பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு புதன்கிழமை வந்த ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டினா், அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளித்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

சிதம்பரம் அருகே கிள்ளையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு புதன்கிழமை வந்த ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டினா் அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

அப்போது, பள்ளி மாணவா்கள் தேசப்பற்று பாடல்களை பாடினா். பின்னா், ஹங்கேரி நாட்டினரும் அவா்களுடைய தேசிய பாடலை பாடினா். இந்த நிகழ்ச்சி இரு நாட்டவருக்கமான நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்தது.

பின்னா், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருள்களை வழங்கினா். தொழிலதிபா் பழனிசாமி, நீதிமணி ஆகியோா் ஹங்கேரி நாட்டினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா். கிள்ளையில் உள்ள அரசுப் பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளி என்பதால், ஹங்கேரி நாட்டினா் நினைவுப் பரிசாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.