கடலூர்
இணையவழியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
காட்டுமன்னாா்கோவில் அருகே இணையவழியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே இணையவழியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் பரமசிவம் (25). இவா், இணையவழியில் கஞ்சா விற்பனை செய்வதாக காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று கஞ்சா விற்பனை செய்த பரமசிவத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் அவரது செல்போனை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.