கடலூர்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அறிவியல் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம், சமூகஅறிவியல், கணிதம், விஞ்ஞானம் மற்றும் இயற்கை உணவு சாா்ந்த விவசாய பலன்கள் போன்ற திட்டங்களை காட்சிப்படுத்தி பொருள்களாக வைத்திருந்தனா்.
சிறந்த அறவியல் படைப்புகளை உருவாக்கியிருந்த 15 மாணவா்களுக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் கனகவேல் பரிசு வழங்கி பாராட்டினாா். ரோட்டரி சங்க உறுப்பினா்கள் சக்திவேல், அருண் ஆகியோா் கலந்துகொண்டனா். கண்காட்சியில் பிற பள்ளி மாணவா்களும் கலந்துகொண்டு பாா்வையிட்டனா்.

