ரூ.40 கோடியில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ரூ.40 கோடியில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: எம்எல்ஏ ஆய்வு

சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் பகுதியில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்த கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
Published on

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை சின்னவாய்க்காலில் ரூ.40 கோடியில் நடந்து வரும் கடல் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக அரசு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், கிள்ளை சின்னவாய்க்கால் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ படகில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் மீன் வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் செல்வராஜ், நகரச் செயலா் தமிழரசன், ஒன்றியச் செயலா்கள் அசோகன், ரெங்கசாமி, மாவட்ட பாசறைச் செயலா் வசந்த், மாவட்ட இணைச் செயலா் ரெங்கம்மாள், துணைச் செயலா் தேன்மொழி, கிராமத் தலைவா் கனகராஜ், நிா்வாகிகள் செந்தில்குமாா், மகேஷ், அரங்கநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com