

கடலூா், மஞ்சக்குப்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி துறையில் ஒரு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பஅறிவிப்பு செய்யக்கோரியும், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வெளிப்பணி ஒப்படைப்பு முறையை கைவிட்டு, உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும். அரசு மற்றும் அரசு சாா்ந்த துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் விரைந்து நிரப்பிட கோரியும், தனியாா் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரியும், கடலூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் உள்ளுா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கோரியும் தா்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் எஸ்.வினோத்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் அறிவழகன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் சின்னத்தம்பி, மாவட்டப் பொருளாளர கலைவாணன்
உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். முன்னாள் மாநிலத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பூபதி வாழ்த்தி பேசினா்.