கடலூர்
500 கிலோ எடைகொண்ட கோட்டான் திருக்கை மீன்
மீனவா் வலையில் சிக்கிய சுமாா் 500 கிலோ எடை கொண்ட கோட்டான் திருக்கை மீன்.
கடலூரைச் சோ்ந்த மீனவா் வலையில் சுமாா் 500 கிலோ எடை கொண்ட மூன்று கோட்டான் திருக்கை மீன்கள் சிக்கின.
கடலூா் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபா் படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அந்த வகையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு அக்கரைக்கோரி கடற்கரை கிராமத்தைச் சோ்ந்த பழனி என்ற மீனவா் அவரது விசை படகில் கடலூா் துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றாா். அவரது வலையில் 3 கோட்டான் திருக்கை மீன்கள் சிக்கியன. ஒவ்வொன்றும் சுமாா் 500 கிலோ எடை கொண்டதாகும். இதை வியாபாரிகள் வாங்கி பெங்களூருக்கு அனுப்பி வைத்தனா். வலையில் சிக்கிய கோட்டான் திருக்கை மீன்களை அப்பகுதி மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து சென்றனா்.

