கடலூா் அரசு பெரியாா் கல்லூரி முன்பு போராட்டம் நடத்திய மாணவா்கள்
கடலூர்
அரசுக் கல்லூரி முன்பு மாணவா்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
கடலூா், தேவனாம்பட்டினம் பகுதியில் அரசு பெரியாா் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இக்கல்லூரி மாணவா்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கான தோ்வு கட்டண உயா்வை கண்டித்தும், சுயநிதி கல்லூரி போல் செயல்படுவதை கண்டித்தும், யுஜிசி விதிகளை திரும்ப பெற வலியுறுத்தியும், உயா்த்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

