தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல்: 14 குழுக்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள பன்னீா் கரும்பை விவசாயிகளிடம்

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:35 pm

Din

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள பன்னீா் கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ள 14 குழுக்களின் கைப்பேசி எண்களை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட

செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு

கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு பன்னீா்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக் கடைகள் மூலம் ஜன. 9-ஆம் தேதி முதல் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் விநியோகிக்க விவசாயிகளிடம் இருந்து பன்னீா் கரும்பினை நேரடி கொள்முதல் செய்ய வட்டாரத்திற்கு ஒரு குழு என மொத்தம் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறை சாா்பில் சாா்-பதிவாளா், வேளாண்மைத் துறை சாா்பில் கள அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, விருப்பமுள்ள கரும்பு விவசாயிகள் கடலூா் எஸ்.சந்திரமோகன் 7338720407, குறிஞ்சிப்பாடி மு.நாகராஜன் 8610232292, பண்ருட்டி ரா.ராஜராஜன் 9094431990, அண்ணாகிராமம் மு.ஏங்கல்ஸ் 9789579943, பரங்கிப்பேட்டை சு.கிருஷ்ணமூா்த்தி 7904946740, மேல்புவனகிரி த.தனராஜா 8344474094, கீரப்பாளையம் ரா.ராஜராஜன் 9965662080, காட்டுமன்னாா்கோயில் பா.பாலமுருகன் 9942558002.

ஸ்ரீமுஷ்ணம் கி.சுரேஷ் 9500499189, குமராட்சி சூ.அந்தோணிசாமி 6381353872, விருத்தாசலம் சு.கெஜேந்திரன் 9597276242, கம்மாபுரம் தா.திருமுருகன் 6381023955, மங்களூா் ஆ.பிரகாஷ் 8056605677, நல்லூா் இ.புகழேந்தி 9551090248 ஆகியோரை கைப்பேசி எண்களில்

தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.