திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

அண்ணாகிராமம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்த இந்து மக்கள் கட்சியினா்.
Updated On :8 ஜனவரி 2025, 8:30 pm

Din

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில், அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

பண்ருட்டி வட்டம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள பனப்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது. இதனால், பனப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆன்மிகப் பேரவை மாவட்டத் தலைவா் சிவ.நாகராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலா் வீராசாமி, பண்ருட்டி நகரத் தலைவா் நித்தியானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.