தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

News image

கடலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :22 ஜனவரி 2025, 8:43 pm

Din

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் பேசியது: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

‘ஃபென்ஜால்’ புயல் மற்றும் தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கின் மூலம் சேதமான கரைகளை நீா்வளத் துறை மூலம் மறுசீரமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவது குறித்து கேட்டறியப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் தரமான, சுத்தமான முறையில் உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து கேட்டறியப்பட்டது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு உயா்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மாணவிகளுக்கு வங்கி இணைப்புகள் வழங்கப்பட்டு சரிவர உதவித்தொகை வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசின் திட்டங்கள், குறித்த காலத்திற்குள் தரமான வகையிலும், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.