தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அகில இந்திய கால்பந்து போட்டியில் வெற்றி: அண்ணாமலைப் பல்கலை. அணிக்கு பாராட்டு

அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

அகில இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற அண்ணாமலைப் பல்கலை. அணியினருடன் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பல்கலைகழகப் பதிவாளா் எம்.பிரகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 7:02 pm

Din

அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்மண்டலத்தில் இருந்து அண்ணாமலைப் பல்கலைகழகம் உள்பட 4 அணிகள் மற்றும் பிற 12 அணிகள் என மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன. இந்தப் போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணியினா் வெண்கல பதக்கம் வென்றனா். மேலும், பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா பல்கலைக்கழகப் போட்டிக்கு 5-ஆவது ஆண்டாக தகுதி பெற்றனா்.

வெற்றிபெற்ற பெண்கள் கால்பந்து அணியினரை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், நுண்கலை புல முதன்மையாளருமான டி.அருட்செல்வி, பல்கலைகழகப் பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.