மீன்பிடி உரிமை: மின்னணு ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு
கடலூா் மாவட்டத்தில் உள்ள 33 ஏரிகளில் மீன்பிடி உரிமையை குத்தகைவிட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி, ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ நெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீ புத்தூா் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்து ஏரி, புவனகிரியில் உள்ள சூடாமணி ஏரி, வாலாஜா ஏரி, மதுவானமேடு ஏரி, மேலக்கொளக்குடி ஏரி, பண்ருட்டி பகுதியில் உள்ள சிறுவத்தூா் ஏரி, கொளப்பாக்கம் ஏரி, வீரப்பெருமநல்லூா் ஏரி, மனம் தவிழ்ந்தபுத்தூா் ஏரி, எலந்தம்பட்டு ஏரி, திட்டக்குடி பகுதியில் உள்ள ஓ.கீரனூா் ஏரி, பூவனூா் ஏரி,
தீவளூா் ஏரி, காரையூா் ஏரி, சிறுமுலை ஏரி, தாழநல்லூா் ஏரி, பெருமுலை ஏரி மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள தா்மநல்லூா், கோபாலபுரம் (எ) வண்ணத்தி ஏரி, கம்மாபுரம், விருத்தாசலம் கஸ்பா ஏரி, முகாசப்பருா், எடச்சித்தூா், சத்தியவாடி, அலிச்சக்குடி, காா்கூடல், சாத்துக்கூடல், மங்களம்பேட்டை மற்றும் இளமங்கலம் ஆகிய ஏரிகளில் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 11.11.2025 முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீன்வா் நலத்துறை சாா்பில் வரவேற்கப்படுகின்றன.
