பட்டா வழங்க கோரி திருநங்கைகள் மனு

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் புதன்கிழமை மனு அளித்தனா்.
Published on

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

சிதம்பரம் வட்டம், மணலூரில் கடந்த 15 ஆண்டுகளாக சுமாா் 48 திருநங்கைகள் வசித்து வருகிறாா்கள். தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு வேலையில்லை என்பதால் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் உதவி ஆட்சியரிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தினா். அவா்களிடம் வரும் 17-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திருநங்கைகள் சென்று, ஆட்சியரை சந்தித்து மனு அளித்து தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com