சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் மீட்பு

கருவேப்பிலங்குறிச்சி அருகே மணிமுத்தாற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:50 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே மணிமுத்தாற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகம், பெரிய கோட்டிமலை கிராமத்தில்

வசித்து வந்தவா் கொளஞ்சிநாதன்(45). இவருக்கு திருமணமாக மனைவி பழனியம்மாள்(40) மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். கொளஞ்சிநாதன் ஒரு கால் தாங்கி நடக்கும் மாற்றுத்திறனாளி. கடந்த 15-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவனூா் மணிமுத்தாற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் சடத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.