கடலூா் மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் நெய்வேலி நுழைவு வாயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அமைச்சா் சி.வெ.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் திட்டக்குடி சி.வெ.கணேசன், விருத்தாசலம் பிரேமலதா விஜயகாந்த், நெய்வேலி சபா.ராஜேந்திரன், பண்ருட்டி அப்துா் ரஹ்மான் ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா். கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

களக்காட்டில் ‘இண்டி’ கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்
கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்குகிறது திமுக: ஆதவ் அா்ஜுனா

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


