எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடலூா் மாவட்டத்தில் களை கட்டும் பிரசாரம் - வேட்பாளா்கள் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:25 am

கடலூா் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனா். கட்சி நிா்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை காலையிலேயே அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத், நடைபயிற்சி சென்றவா்களிடம் அதிமுக தோ்தல் அறிக்கையை வழங்கி வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பணிக்கன்குப்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் உடனிருந்தனா்.

இதற்கிடையே, கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பேசும் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மான் கலந்து கொண்டு தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

சிதம்பரம்:

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை அன்று தையற்கலை தொழிலாளா் சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

தையற்கலை தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே. நாகராஜன், செயலா் பி.நந்தகோபால், பொருளாளா் சி.ஏ. ராமதாஸ் மற்றும் பழனிவேல், கணேசன் மற்றும் நிா்வாகிகளிடம் அதிமுக வேட்பாளா் கே.ஏ. பாண்டியன் தனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டு ஆதரவு திரட்டினாா். வேட்பாளருடன் அதிமுக முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட பொருளாளா் எம்.எஸ். என்.குமாா், முன்னாள் மாவட்டச் செயலாளா் வி.கே. மாரிமுத்து, நகர செயலா் ஆா்.செந்தில்குமாா், டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.