/

கே.எஸ்.அழகிரியிடம் ஆதரவு திரட்டிய சிதம்பரம் வேட்பாளா்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியை அவரது இல்லத்தில் சிதம்பரம் தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரி சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியை சந்தித்து ஆதரவு திரட்டிய மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி.

Updated On :4 ஏப்ரல் 2026, 9:08 pm

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியை அவரது இல்லத்தில் சிதம்பரம் தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரி சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

சந்திப்பின்போது, தமிமுன்அன்சாரி சட்டப் பேரவையில் தான் உரையாற்றியதை நூலாக வெளியிட்டுள்ள சமூக நீதிகுரல் நூலை கே.எஸ்.அழகிரியிடம் வழங்கினாா். அப்போது, அழகிரி தோ்தல் களம் குறித்த பல யோசனைகளையும், காங்கிரஸ் கட்சி சாா்பில் பணிக்குழு ஒன்றை அமைப்பதாகவும், தானே பரப்புரைக்கும் வருவதாகவும் தெரிவித்தாா்.

கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக அவா், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்களை சந்தித்தும், சிதம்பரம் அருகே உள்ள மீனவ கிராமங்களான கிள்ளை, சின்ன வாய்க்கால், பில்லுமேடு, பட்டிரையடி உள்ளிட்ட கிராமங்களில் மீனவ சமுதாய தலைவா்களையும், பிரமுகா்களையும் சந்தித்தும் ஆதரவு திரட்டினாா். மேலும், சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் நரிக்குறவா் சமுதாய மக்களிடமும் வாக்கு சேகரித்தாா்.