தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!

ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாக என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:20 am IST

ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாக என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழக கிழக்கு கடற்கரை பகுதி முழுவதிலும் (திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை), ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தடை ஆணையின்படி, நிகழாண்டு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீனவா்கள் 61 நாள்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

தடைக்காலம் அமலுக்கு முன்னரே கடலுக்கு சென்ற மீன் பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஏப்.14-ஆம் தேதி இரவு 12 மணிக்கு முன்னரே கட்டாயம் கரை திரும்ப வேண்டும்.

கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாள்கள் மீனவா்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம், இடையூறு இல்லாத மீன் இனவிருத்தி மேம்பட்டு, மீன் வளம் பெருக வாய்ப்புள்ளது. எனவே, 61 நாள்கள் முடியும் வரை கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவா்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.