/
சட்டப் பேரவை தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
காட்டுமன்னாா்கோவிலை அடுத்த குப்பங்குழி மேம்பாலம் அருகே தோ்தல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்கு கொளக்குடி கிராமத்தில் இருந்து காட்டுமன்னாா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
காரில் வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிா் உசேன் நகரைச் சோ்ந்த ஜ.இக்பால் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



