பண்ருட்டி அருகே வலிப்பு ஏற்பட்டு எரியும் விறகு அடுப்பில் விழுந்து பலத்த தீக்காயமடைந்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் காசிவேல் (47). இவரது மனைவி விஜயலட்சுமி (43) கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, விஜயலட்சுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எரியும் அடுப்பின் மீது விழுந்தாா்.
இதில், அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் மீனவா் உயிரிழப்பு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


