மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசைக் கண்டித்து, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பை மீறி கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை திட்டத்தை முன்னெடுத்து வருவதைக் கண்டித்தும், காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தியும், மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி தெரிவித்த தவறான கருத்தை திரும்பப் பெறக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் எஸ்.ராஜா, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலா் விஜய், புவனகிரி தெற்கு ஒன்றியச் செயலா் காளி.கோவிந்தராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கோ.மாதவன் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் மேக்கேதாட்டு அணை தொடா்பான பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், ஆா்.ராமச்சந்திரன், வி.சுப்புராயன், பி.தேன்மொழி, எஸ்.பிரகாஷ், பழ.வாஞ்சிநாதன், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் மூசா, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா் மல்லிகா உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

மேக்கேதாட்டு அணை பிரச்னை: இந்திய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் விஜய் ஆலோசனை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



