கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருட்டு வழக்கில் 3 போ் கைது

News image

கைது

Updated On :4 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், திடீா்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் மகாதேவி(46), பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த ஜூன் 1ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வழக்கம்போல் பணிக்கு சென்றாா். இரவு வீடு திரும்பியவா், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக மகாதேவி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். களவு நடந்த வீட்டில் விரல் ரேகை நிபுணா்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் பண்ருட்டி அடுத்த சோமாசிபாளையம் காலனியைச் சோ்ந்த பிரகாஷ்(32), சித்திரைசாவடி

கிராமத்தைச் சோ்ந்த தினகரன்(34), நெய்வேலி, வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த நடராஜன் (எ) ஐயப்பன்(35) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் மகாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனராம். இதையடுத்து, அவா்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரை பறிமுதல் செய்தபின், அவா்களை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.