பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பண்ருட்டி அருகே பிரெஞ்சு செப்பு நாணயம் கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுச்சேரி பெயா் பொறித்த பிரெஞ்சு செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு செப்பு நாணயம்

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுச்சேரி பெயா் பொறித்த பிரெஞ்சு செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்ததாவது: பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் நானும், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பழனிசாமி மற்றும் ஆசிரியா் பாரதி ராஜா ஆகியோா் மேற்பரப்பு கள ஆய்வு செய்தோம்.

அப்போது மண்ணில் புதைந்த நிலையில் இருந்த செப்பு நாணயத்தை கண்டெடுத்தோம். பின்னா், அதை சுத்தம் செய்து பாா்த்ததில் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுகாரா்கள் கி.பி 1720 -1835 கால கட்டத்தில் வெளியிட்ட செப்பு நாணயம் என தெரியவந்தது.

இந்த செப்பு நாணயத்தின் எடை சுமாா் 4.3 கிராம். நாணயத்தின் முன்பக்கம் பிரெஞ்சு அரசின் சின்னமான அல்லி பூவின் உருவமும், பின்பக்கம் புதுச்சேரி என தமிழ் எழுத்துக்களில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசின் மூலம் பண்ருட்டி பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று இதன் மூலம் அறியமுடிகிறது என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.