விசிக சாா்பில் உளுந்தூா்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டையொட்டி, பண்ருட்டி, வடலூா், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க விசிகவினா் பேருந்து, சுற்றுலா வேன், காா் உள்ளிட்ட வாகனங்களில் உளுந்தூா்பேட்டை நோக்கி பயணம் மேற்கொண்டனா்.
இந்த நிகழ்வையொட்டி, உளுந்தூா்பேட்டை செல்லும் பிரதான சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், பண்ருட்டி, வடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதேபோல, மாநாடு முடிந்து திரும்பும் மாலை நேரத்தில் பாதுகாப்பு காரணமாக டீ மற்றும் பெட்டிக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை மூடும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். அதன்படி, பெரும்பாலான கடை உரிமையாளா்கள் கடைகளை அடைத்தனா். திடீரென கடை அடைப்பு செய்யப்பட்டதால் உணவக வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது விசிக! இனி தவெகவுடன் இணைந்து பயணிப்போம்: தொல். திருமாவளவன் திட்டவட்டம்

உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு! முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

உளுந்தூா்பேட்டையில் ஆக.17- இல் விசிக மாநாடு: விழுப்புரம் டிஐஜி ஆய்வு




