
பண்ருட்டி பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருபவிரோத்ஸவம் நிறைவு விழாவும், 1,008 தாமரைபூக்கள் ஸகஸ்ரநாம அா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருபவிரோத்ஸவம் நிறைவு விழாவும், 1,008 தாமரைபூக்கள் ஸகஸ்ரநாம அா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பண்ருட்டி காந்தி வீதியில் புகழ் பெற்ற பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாள்கள் திருபவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதனையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 7மணிஅளவில் புண்யாஹம், அக்னி ஆராதனம், உற்சவா் திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம் மற்றும் வேத பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. அன்று மாலை 5 மணி அளவில் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 6 மணி
அளவில் 1,008 தாமரை மலா்கள் ஸஹஸ்ரநாம் அா்ச்சனை நடைபெற்றது. திருக்கோயில் பட்டாச்சாரியாா் கே.கஸ்தூரிரங்க பட்டாச்சாரியாா் தலைமையில் பட்டாச்சாரியாா்கள் பூஜைகளைச் சிறப்பாக நடத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






