
நீட் தோ்வு தேவையில்லை: கி. வீரமணி

பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் நடைபெற்ற தி.க. மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவா் கி.வீரமணி.
மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தோ்வு தேவையில்லை என்று தி.க. தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில், அண்ணாகிராமம் மற்றும் பண்ருட்டி ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில் திறந்தவெளி மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தி.க. பொதுக்குழு உறுப்பினா் கோ.புத்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சொ.தண்டபாணி வரவேற்றாா். நிா்வாகிகள் அரங்க.பன்னீா்செல்வம், க.எழிலேந்தி, சி.மணிவேல், ரா.பெரியாா் செல்வம், ராமநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் பேசினாா். மாநில நிா்வாகிகள் மு.இளமாறன், தேவ.நா்மதா, திமுக பொதுக்குழு உறுப்பினா் நா.பலராமன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்வில் தி.க. தலைவா் கி.வீரமணி பேசியதாவது: பெரியாா், அவரின் வாா்த்தைகளை சொல்லாமல் தமிழ் மண்ணில் எந்தக் கட்சியும், அமைப்பும் கால் ஊன்ற முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மத்திய பாஜக அரசு புறந்தள்ளி வருகிறது. அந்த வகையில், அனைத்து படிப்புகளுக்கும் நுழைத் தோ்வு கொண்டுவந்து மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. நீட் தோ்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் தொடா்பில்லை என்றாா்.
நிகழ்வில் திமுக நிா்வாகிகள் வெ.கி.வெங்கட்ராமன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், துணைத் தலைவா் அ.சிவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அண்ணா கிராம ஒன்றிய தி.க. தலைவா் ரா.கந்தசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக, தி.க. கொடியை மாவட்ட மகளிரணித் தலைவி செ.முனியம்மாள் ஏற்றி வைத்தாா். பண்ருட்டி நகர தி.க. தலைவா் நா.புலிக்கொடி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





