நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல் கூட்டணி உருமாறும்: கி.வீரமணி கணிப்பு

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் கூட்டணி உருமாறலாம் என்று தி.க. தலைவா் கி.வீரமணி கூறினாா்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் கூட்டணி உருமாறலாம் என்று தி.க. தலைவா் கி.வீரமணி கூறினாா்.

புதுச்சேரி பாகூரில் திராவிடா் கழகம் சாா்பில் திறந்தவெளி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கி.வீரமணி சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் கடந்த 80 ஆண்டுகளாக திராவிடா் இயக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாகலாம். தற்போது இருக்கிற அணியும் உருமாறலாம்.

மாநில அரசுக்கு சட்ட ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், ஜாதி வாரி கணக்கெடுப்பிலும் மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

பரந்தூா் விமான நிலையம் கைவிடப்பட்டது, இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்கும் நிலை. தவெக அரசின் 100 நாள் சாதனை குறித்த கேள்விக்கு, தவெக ஆட்சியாக இருந்தால் நல்லது. ஆனால் காட்சியாகத் தான் உள்ளது.

சட்டப்பேரவைத் தலைவா் மட்டும் நடுநிலையாக நடந்து கொண்டு சில செய்திகளை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறாா். இதுவரை ஆளுங்கட்சியினா் பேசும் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியதாக வரலாறு இல்லை. அதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனை என்றாா் கி.வீரமணி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.