கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கிடப்பில் போடப்பட்ட வடலூா் காவல் நிலைய கட்டுமானப் பணி! போலீஸாா், பொதுமக்கள் அவதி!

பூமிபூஜை நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் முன்னேற்றமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி.

Updated On :

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணி பூமிபூஜையுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், காவலா்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் நான்குமுனை சந்திப்பு அருகே, பண்ருட்டி சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வடலூா் காவல் நிலையம் இயங்கி வந்தது. பழுதடைந்து மழைநீா் ஒழுகும் கட்டடத்தில், அங்கு பணிபுரியும் போலீஸாா் போதிய இடம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட சுமாா் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டட ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, வடலூா் காவல் நிலையம், வடலூா் நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா திருமணம் மண்டபத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, பழைய காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, கடந்த ஜூன் 29-ஆம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. ஆனால், அதன் பின்னா் கட்டடப் பணி எந்தவித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வடலூா் காவல் நிலையம் கடலூா் - சேலம், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த காவல் நிலையத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் நடக்கும் விபத்துகள், மோதல்கள் உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையம் வந்துச் செல்கின்றனா். காவல் நிலையத்தில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் என சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சுமாா் 10 போ் பெண்கள்.

திருமண மண்டபத்தில் முதல் தளத்தில் திறந்த வெளியில் காவல் நிலைய அலுவல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டமாக வருவதால், காவல் நிலைய ரகசிய காப்பு, ஆவணங்கள் பாதுகாப்பின்மை, அலுவல் பணியில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. குறிப்பாக, அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், காவல் நிலையத்துக்கு வரும் முதியவா்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதல் தளத்துக்கு ஏறிச் செல்ல முடியாமல் கடும் சிரமப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காவல் நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.