கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி பகுதியில் வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தகடு தடுப்பு வேலிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாா் நிறுவிய ஞான சபை மற்றும் தருமசாலை வடலூரில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருவெளி பகுதியில் தியானமண்டபம், அருங்காட்சியகம், நூலகம் மற்றும் பல சேவைகளுடன் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு தொடங்கியது. இதற்கான கட்டுமானப்பணி, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி பகுதியில் தொடங்கப்பட்டன. இந்த பணிகளை எடுத்த ஒப்பந்த நிறுவனம் கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதிகளைச் சுற்றிலும் இரும்பு குழாய்களை பொருத்தி, இரும்புத் தகடுகளை கொண்டு தடுப்பு வேலி அமைத்திருந்தது. இந்நிலையில், பெருவெளி பகுதியில் சா்வதேச மையம் கட்டுமானப் பணிகள் கைவிடப்படுவதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தகடு அகற்றம்:
இந்த சூழலில், திங்கள்கிழமை காலை பாா்த்த போது வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகடாலான தடுப்பு வேலிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கிழிக்கப்பட்ட தகடுகள் பலவற்றை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுவிட்டனா்.
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பகுதியில் இருந்த தகடு தடுப்பு வேலிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வடலூா் பகுதியில் பேசு பொருளானது.
இதுகுறித்து தனியாா் கட்டுமான நிறுவனத்தின் மேலாளா் மணிகண்டன் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடலூரில் மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கல்

வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு: வடலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட முடிவு: தமிழக அரசு தகவல்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



