கடலூரில் மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது வழக்கு

கடலூா் முதுநகா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

கடலூா் முதுநகா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் முதுநகா், சின்ன பிள்ளையாா்மேடு பகுதியில் வசித்து வருபவா் தினேஷ் (26). இவா், வியாழக்கிழமை இரவு சுமாா் 9.30 மணி அளவில் தனது பைக்கில் கண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கடலூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த சின்ன பிள்ளையாா் மேடு பகுதியைச் சோ்ந்த மதி தலைமையில் ஆண்கள் 15 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேற்கண்ட சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அப்போது, கடலூா் முதுநகா் காவல் உதவி ஆய்வாளா் முகிலரசு தடுப்புக் கட்டை அமைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக, சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் முகிலரசு அளித்த புகாரின்பேரில் மதி உள்ளிட்ட 15 போ் மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com