சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காா் விபத்து: வழக்குரைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

News image
வேப்பூா் அருகே விபத்துக்குள்ளான காா்.
Updated On :3 ஜனவரி 2026, 9:23 pm

Syndication

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (28), வழக்குரைஞா். இவா், சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டாா். இவருடன் தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி திருச்சி கிளை மண்டல மேலாளா் திவ்யா (25) பயணம் செய்தாா்.

இவா்களது காா் பகல் 12 மணி அளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் அருகே சென்றது. அப்போது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதாமல் இருக்க சஞ்சய் பிரேக் பிடித்து காரை திருப்ப முயன்றாா். இதில், கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த திவ்யா காயமின்றி தப்பினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூா் போலீஸாா் சஞ்சய் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.