போதைப்பொருள் விழிப்புணா்வுப் பேரணி: நீதிபதி தொடங்கி வைத்தாா்
கடலூா் மாவட்டம், விருத்தாச்சலத்தில் போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் சாா்பில், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆய தீா்வை துறை சாா்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாா் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நீதிபதிகள்
செல்வராஜ், அன்னலட்சுமி, ஜவகா், ஆா்த்தி, குற்றவியல் நடுவா்கள் அரவிந்தன், அன்பழகன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விஜயகுமாா், பாா் அசோசியன் சங்கத் தலைவா் சாவித்திரி, இலவச சட்ட உதவி முகாம் செயலா் அஸ்வத் ராமன், பள்ளி தலைமையாசிரியா் வினோத்குமாா், உதவி தலைமை ஆசிரியா் ஜெயராணி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய சலை வழியாக சென்றது. பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, போதைப் பொருள்கள் எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பி சென்றனா்.

